இந்தியாவின் பிரதமரான திரு. நரேந்திர மோடி அவர்கள், டெல்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்திற்கு சென்று, அங்குள்ள வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர் எல்லாக் காலநிலையிக்கும் தாக்குப் பிடிக்கும் 109 வகையான தானியங்களை அறிமுகப்படுத்தினார்.
109 வகை தானியங்கள்:
இந்தியாவை ஊட்டச்சத்து உள்ள நாடாக மாற்றுவதற்கு மதிய உணவு மற்றும் அங்கன்வாடி போன்ற பல திட்டங்கள் பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இந்தியாவை மேலும் வலுப்படுத்த 109 வகை தானியங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில், 34 வகைகள் பெரிய நிலத்தில் பயிரிடும், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயிர்கள் போன்றவையாகும். மேலும், அடுத்த 27 வகைகள் தோட்டக்கலையில் பயிரிடும், பூக்கள் மற்றும் பழங்கள் போன்றவையாகும். இது போன்ற திட்டங்கள் இன்னும் நமது நாட்டை வளப்படுத்தும் நோக்கில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.