இனி, வீட்டில் இருந்தே வாக்காளர் அட்டையை ஆன்லைனில் Apply பண்ணலாம்..!!

இந்தியாவில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமக்களும் வாக்காளர்  அடையாள அட்டையை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்த வாக்காளர் அடையாள அட்டை வாக்களிப்பதற்கு பயன்படுவது  மட்டுமின்றி, இதுவே அவர்களுக்கு  இந்திய குடிமக்கள் என்ற அடையாளத்தையும் வழங்குகிறது. அந்த வகையில் , 18 வயது நிரம்பியவர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வாக்காளர்  பட்டியலில் பெயர் சேர்க்கலாம். அதன்  வழிமுறைகளை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

முதலில், 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்களாக இருந்தல் வேண்டும். வேறு எந்த ஒரு  மாநிலத்திலும் வாக்காளர் அடையாள அட்டையை பதிவு செய்திருக்க கூடாது. மேலும்,முகவரி சான்று, வயது சான்று, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் பான் கார்டு  போன்றவை வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்ய தேவைப்படும்.

 ஆன்லைன்   வாக்காளர் அட்டை பதிவு செயல்முறை:

1.ஆன்லைனில் விண்ணப்பிக்க, www.nvsp.in என்ற தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தை(NVSP) பார்வையிடவும் .
2.New Voter Registration  விருப்பத்தை கிளிக் செய்யவும்.
3. அதில், பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம், முகவரி, அடையாள ஆவணங்கள் முதலியவற்றை படிவம் 6-ல் சமர்பிக்கவும்.
4.மேலும், Submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
5. Track Status விருப்பத்தை கிளிக் செய்து, உங்கள் விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம்.

ஆஃப்லைன்   வாக்காளர் அட்டை பதிவு செயல்முறை:

1. அருகில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தின் பூத் லெவல் அதிகாரியிடம் இருந்து படிவம் 6-யை பெற்று பூர்த்தி செய்து,   பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம், முகவரி, அடையாள ஆவணங்கள் முதலியவற்றை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

2. அவர், உங்கள் படிவத்தை சரிபார்த்து, விண்ணப்ப எண் அடங்கிய  ரசீதை வழங்குவார்.

ஒருவேளை, உங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அருகில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு  சென்று புகார் தெரிவிக்கலாம்.

Read Previous

வர வர மாமியார் கழுதை போல் ஆனார்..!! உண்மையான விளக்கம் என்ன தெரியுமா?..

Read Next

அசத்தல் சுவையில் கறிவேப்பிலை சிக்கன் சுக்கா..? எப்படி செய்வது?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular