உலகின் முன்னணி சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராமில் இளம் தலைமுறை ஆண்களும், பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை பெறுவது வழக்கம். இந்த செயலியில் இதுவரை ஒரே நேரத்தில் 10 புகைப்படம் அல்லது வீடியோக்களை மட்டும் தான் பகிர முடிந்தது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கையை பத்தில் இருந்து இருபதாக Instagram நிறுவனம் உயர்த்தி உள்ளது. இந்த புதிய அம்சம் உலகம் எங்கும் தற்போது அறிமுகமாகியுள்ளது.