
இன்று ஆவணி மாதத்தின் ஆவணி அவிட்டம் என்று தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வசிக்கும் பிராமணர்களுக்கான நாளாகும்..
ஆவணி அவிட்டம் என்பது உபகர்மம் என்று அழைக்கப்படும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வசிக்கக்கூடிய பிராமண சமூகத்தினர் இச்சடங்கை ஆண்டு தோறும் செய்து வருவது வழக்கம், 27 நட்சத்திரங்களில் அவிட்ட நட்சத்திரத்திற்குரிய இந்த நாளில் தங்களின் பாவங்கள் தீர்ந்து புண்ணியங்கள் தேடி வருவதற்காக இச்சடங்கை செய்து வருகின்றனர், அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தில் நீராடி பிராமணர்கள் பூணூல் அணிந்து புதிய தொடக்கத்தை குறிக்கும் வகையில் இச்சடங்கு நடைபெறும், இந்தச் சடங்கின் முக்கிய நோக்கமானது தங்களின் ஓராண்டு கால பாவங்கள் எல்லாம் கழிந்து புதிய வாழ்வை தொடங்குவதாக குறிக்கும்..!!!