
ஆடி மாதம் என்றாலே கோவில்கள் தோறும் பக்தியும், பரவசமும், பூஜையும் புனஸ்காரம் என்று கோலாகலமாக இருக்கும்.
பொதுவாகவே தமிழ் பெண்களுக்கு கடவுள் பக்தி அதிகம் அப்படி இருக்கும் பட்சத்தில் ஆடி மாதம் என்றாலே பக்தி பரவசமடையும், அம்மனுக்கு வழிபாடு என பல நிகழ்வுகளை சிறப்பாக செய்து கொண்டிருப்பது பெண்கள், ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளியும் அம்மன் கோவில்களில் தரிசனம் சிறப்பாகவும் அன்னதானம் மற்றும் பூஜைகள் பல நடைபெறும், மேலும் இந்த கடைசி ஆடி வெள்ளியில் தெய்வத்தை வணங்கி ஒருவேளை விரதம் இருந்து பொங்கல் அல்லது பழங்களை தானமாக கொடுத்து வந்தால் குடும்ப விருத்தியாகும் மற்றும் கடல் தொல்லை நிவர்த்தி ஆகும் என்று கூறுகின்றனர்..!!