இன்று பரமக்குடியில் இம்மானுவேல் ஜெயந்தியை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
தியாகி இமானுவேல் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் பரமக்குடியில் அவரின் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார், இந்த செப்டம்பர் 11 காலை பரமக்குடியில் இம்மானுவேல் ஜெயந்தி சிறப்பாக நடந்து வருகிறது மேலும் தமிழகத்தில் எண்ணற்ற காவல்துறையின் கண்காணிப்பில் பாதுகாப்பான முறையில் இமானுவேல் ஜெயந்தி அமைதியான முறையில் நடந்து வருகிறது, இமானுவேல் ஜெயந்திக்கு மாலை அணிவதற்கு மதுரை திண்டுக்கல் ராமநாதபுரம் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் பிரச்சனைகள் ஏற்படாத வகையில் இருப்பதற்கும் ஏராளமான காவல் துறையினரை அமர்த்தியுள்ளது தமிழக அரசு, மேலும் உதயநிதி ஸ்டாலின் தனது தளத்தில் இம்மானுவேல் ஐயாவின் சமரசமற்ற புகழ் தலைமுறை தாண்டி ஓங்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்..!!