இன்று கடல் மீது பழிபோடுகிறது ஆளும் அரசு – டி.ஜெயக்குமார்..!!

மழை வெள்ளத்துக்கு இன்று கடல் மீது பழிபோடுகிறது ஆளும் அரசு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை மழை வெள்ள பாதிப்பு குறித்து பேசியுள்ள அவர், வானிலை மையம் புயல் பற்றி அறிவித்த உடனே என்ன செய்திருக்க வேண்டும்? இந்த விடியா அரசு அது குறித்து மக்களை தயார் படுத்தி இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்கி வைக்க முடியாத அளவுக்கு முன்னேற்பாடுகள் செய்யாமல் இந்த அரசு கோட்டை விட்டுவிட்டது. புயல் பாதிப்புக்கு கடல் மீது அபாண்டமாக பழிபோடுகின்றனர். கடல் சரியாக தண்ணீரை உள்வாங்கவில்லை என்று இவ்வாறு அவர் விமர்சித்தார்.

Read Previous

சென்னை வெள்ளத்தில் சிக்கி காவலர் மரணம்..!!

Read Next

I.N.D.I.A கூட்டணி கூட்டம் தள்ளிவைப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular