Oplus_131072
சர்வதேச யோகா தினமாக ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. யோகா இந்திய கலாச்சாரம் இந்த உலகிற்கு கொடுத்த ஒரு அரிய கொடையாகும். யோகாவின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சர்வதேச யோக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி அன்று உலக அளவில் கொண்டாடப்படுகிறது. முதல்முறையாக 2015 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது இந்தியாவில் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் இந்த தினம் தொடங்கப்பட்டது. மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சி காரணமாக ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படும் என ஐநா சபை 2014இல் அறிவித்தது. சர்வதேச யோகா தினத்தில் ஜூன் 21 பல்வேறு நாடுகளிலும் யோகா சம்பந்தமான பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. யோகா உடல் பிரச்சினைகளை தீர்ப்பதோடு மனதுக்கும் நலம் தரும் வாழ்வியல் கலை. எனவே அனைவரும் இந்த கலையை கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒரு சில யோகாசனங்களை யாவது நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டு நமது அன்றாட வாழ்வில் அதை செய்து நலம் பெற வேண்டும். நோயற்ற வாழ்விற்கும் உடல் பலத்திற்கும் ஆயிலுக்கும் யோகாசனங்கள் மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் புரிந்துகொண்டு இந்த சர்வதேச யோகா தினமான ஜூன் 21ஆம் தேதியிலிருந்து தினமும் நாம் அன்றாட வாழ்க்கையில் ஏதாவது ஒரு யோகாசனத்தை செய்வோம்.




