சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு திருவாதிரை நட்சத்திரத்தில் மகா சிவராத்திரி வந்துள்ளது. ஆடி மாதம் என்பதால் இது மேலும் சிறப்பு பெற்றுள்ளது. சக்தி வாய்ந்த இந்த தினத்தில் சிவபெருமானை நீர் கொண்டு ஜலாபிஷேகம் செய்து வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு தானம் செய்தல் புண்ணியத்தை தரும். தங்களால் முடிந்த அளவிற்கு பால், வஸ்திரம், தானியங்கள், வெல்லம், எள், உணவு, தண்ணீர், பழங்கள் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம். உணவு தானம் செய்வது மிகுந்த பலன்களை தரும்.