Oplus_16908288
இன்று முதல் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று உறுதியாக நம்புங்கள். நெருக்கடியான சமயங்களில் நம்பிக்கையுடன் இருக்க உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் எதிர்பார்க்காமலேயே நல்ல விஷயங்கள் நிகழ ஆரம்பிக்கும்.
உங்கள் மனதில் சந்தோஷமான எண்ணங்களை மட்டுமே குடியமர்த்துங்கள், பிறகு மகிழ்ச்சியான நாட்கள் வந்துகொண்டே இருக்கும். இது முழுக்க முழுக்க உங்கள் மனோபாவத்தைப் பொறுத்தது.
உங்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்வோரை, மகிழ்ச்சியுடன் கடந்து செல்லுங்கள். உங்களுடைய வாழ்க்கை முழுவதும் உங்களை மட்டுமே சார்ந்தது, பிறருடைய விமர்சனங்களை அல்ல.
அவமானங்கள் பலரை வீழ்த்திடவும் செய்கிறது. சில நேரங்களில் உயர்த்திடவும் செய்கிறது. பொறுமை மற்றும் மனஉறுதியுடன் செயல்பட்டால். அவமானம் கூட வெகுமானமாய் மாறி விடும்.
மலைகளில் உருவாகும் நதிகளின் சங்கமம் கடலில்தான் சங்கமம் நடக்கும். கடல்களால் நதிகளை உருவாக்க முடிவதில்லை.
சின்ன சின்ன சந்தோசங்களுக்காக எந்த தவறையும் செய்து விடாதீர்கள். வாழ்க்கையில் சந்தோஷத்தை விட நிம்மதியே அவசியமானது.
தேவைகள் அதிகரித்துக் கொண்டேதான் செல்லும் அவ்வப்போது அவற்றை கட்டுக்குள் வைக்காவிட்டால்வாழ்வில் அதனால் வரும் பிரச்சனைகளையும் சந்தித்துதான் ஆக வேண்டும்..!!!
சிந்தித்து_செயலாற்றுங்கள்.




