இன்று முதல் கோடை விடுமுறைக்கு பின் வழக்கம்போல் இயங்கும் சென்னை மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றங்கள்..!!

தமிழகத்தில் நிலவிய வெயில் தாக்கத்தின் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஒரு மாத காலக்கெடு விடுமுறை ஜுன் 2 உடன் முடிந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தில் நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட காரணத்தால், அதுவும் குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கத்திரி வெயில் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் நாடு முழுவதும் வெப்ப அலைகள் வீச தொடங்கியது. இதனை தொடர்ந்து வருடம் முழுவதும் செயல்படும் நீதிமன்றங்களுக்கு மே மாதம் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே மே மாதம் கோடை விடுமுறையாக சென்னை மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மே இரண்டாம் தேதி முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற  மதுரை கிளைக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

சென்னை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றமன்றம் மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டாலும் அவசர  வழக்குகளை விசாரிப்பதற்கு வாரம் ஒரு நீதிபதி என்று அவசரகதி நீதிபதி விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கோடை விடுமுறை ஜுன் 2 உடன்  நிறைவடைந்ததை தொடர்ந்து அதனை தொடர்ந்து ஒரு மாத காலக்கெடு விடுமுறைக்கு பின் சென்னை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை மீண்டும் முழு அளவில் நேற்று முதல் செயல்படும் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

Read Previous

தனது மனைவிக்காக அங்கப்பிரதிஷ்டணம் செய்த நடிகர் சரத்குமார்..!! இதுதான் காரணமா..?

Read Next

கிருஷ்ணகிரியில் சூடு பிடிக்கும் உடும்பு விற்பனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular