
மக்கள் அனைவரும் குப்பைகளை வீதியிலும் தெருக்களிலும் வீசி மாசற்ற சூழலை ஏற்படுத்துதருகின்றனர். இத்தகைய நிலையை மாற்றவே வேலூர் மாவட்டம் புதிய விதிகளை விதித்துள்ளது.
அதன்படி திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2016 ன் படி குப்பைகளை தரம்பிரித்து குப்பைத்தொட்டிகளில் போடாவிட்டால் வீடுகளுக்கு ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500,வணிக வளாகங்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட உள்ளது.
அதேசமயம் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.200 அபராதம். அதேபோல் குப்பைகளை எரித்தால் ரூ.100 அபராதம்.
இந்த மாதிரியான காரியங்களை செய்யும்போது வீடியோ எடுத்துக் காட்டுபவர்களுக்கு ரூ.200 அன்பளிப்பு என அறிவிக்கப்பட்டுடுள்ளது.