
வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புன்னை பேரிக்காய் குணமாக்கிவிடும் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது…..
சுக்கு கசாயத்தை நல்லெண்ணையில் காய்ச்சி சுக்கு தைலம் தயார்படுகிறது நாட்டு மருந்து கடைகளில் வேறு சில மூலிகைகளோடு கலந்து சுக்கு தைலம் கிடைக்கும் இதை தலையில் தேய்த்தால் சைனஸ் ஆல் வரும் தலைவலி சரியாகிவிடும், பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது அதிலிருந்து வெளியேறும் செபொஸ் என்ற நொதி செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது, ஆப்பிள் சைடர் வினிகரில் பருத்தி உருண்டை ஊறவைத்து மறு இருக்கும் பகுதியில் துடைத்து வந்தால் மறு உதிர்ந்து விடும், மாதுளம் பூச்சாற்றை 15 மில்லி அளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் மூலம் நீங்கும், பழுத்த வாழைப்பழம் ஒன்றை நன்றாகப் பிசைந்து அதில் காய்ச்சாத பால் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து முகத்தில் கருமை படந்த இடத்தில் தடவி வந்தால் கருமை நீங்கும், திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் சாப்பிடலாம், தினமும் காலை மாலை இரண்டு நேரமும் கருப்பு பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி கால் வீக்கம் போன்றவை குணமாகும்..!!