இன்றைய ராசிபலன் 14-11-2023..!!

மேஷம்: இன்று நீங்கள் முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சனை ஏற்படும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

ரிஷபம்: கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாக தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள்.

மிதுனம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் நீங்கி சுமூகமான சூழ்நிலை ஏற்படும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள்.

கடகம்: உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

சிம்மம்: உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி கிடைக்கும்.

கன்னி: திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். கணவன், மனைவி இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். இழுபறியாக இருந்த காரியங்களை முடிப்பீர்கள்.

துலாம்: வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். நினைத்தது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும்.

விருச்சிகம்: வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து நடந்துக் கொள்ளவும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

தனுசு: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். மற்றவர்களுக்கு கொடுத்து வராமல் இருந்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையை கேட்டுச் செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும்.

மகரம்: நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.

கும்பம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். திடீர் விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் நிலவும். பணியிடத்தில் மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

மீனம்: எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

Read Previous

சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் – அலைமோதும் கூட்டம்..!!

Read Next

இன்றைய பஞ்சாங்கம் (நவம்பர் 14)..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular