08/08/2024 இன்றைய ராசி பலன் வியாழன் (ஆடி 23) குரோதி வருடம் வளர்பிறை, திதி :சதுர்த்தி திதி இரவு 11:47 அதன் பிறகு பஞ்சமி திதி குளிகை காலை 9 முதல் 10: 30 வரை, இன்று எமகண்டம் காலை 6 மணி முதல் 7:30 வரையும், நல்ல நேரம் 10:45 முதல் 11:45 வரை இருக்கிறது.
மேலும் இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு வெளிப்பயணங்களில் ஆதாயம் கிடைக்கும் என்றும் திடீர் புத்துணர்வு குடும்பத்தில் மகிழ்ச்சி சுப நிகழ்ச்சிகள் நடக்கும், ரிஷப ராசி நேயர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் நாள் வியாபாரம் மற்றும் வாங்குவது விற்பது லாபம் தரும், மிதுன ராசி நேயர்களுக்கு இன்று நற்செய்தியாக குமியும் இன்று மகாலட்சுமி தேவியை வணங்கி வழிபட்டால் உங்கள் எண்ணங்கள் அப்படியே பூர்த்தியாகும், கடக ராசி நேயர்களுக்கு அனைத்து விஷயங்களும் ஏற்ற இறக்கமாக இருக்கும் இருந்தும் நீங்கள் செய்ய இருக்கும் செயல்கள் உங்களை மகிழ்ச்சியாய் வழிநடத்தும், சிம்ம ராசி நேயர்களுக்கு குடும்பத்தில் எரிச்சல் மற்றும் தேவையில்லாத மன வேதனைகள் ஏற்படும் அதனால் அருகில் உள்ள விநாயகர் ஆலயம் சென்று வழிப்பட்டால் நல்லது நடக்கும், கன்னி ராசி நேயர்களுக்கு ஓரளவுக்கு மன வேதனை மற்றும் முன்கோபம் வந்து செல்லும். முடிந்தவரை இன்றைய நாள் பொறுமையை கையாள வேண்டும், துலாம் ராசி நேயர்களுக்கு இன்று அமோகமான நாள் இருந்தும் குடும்பத்தில் கூடுதல் செலவு மற்றும் துணைவியருடன் கூடுதல் மகிழ்ச்சி வணிகத்திறன் செயல்களில் கூடுதலாக நல்ல செய்திகளை பெறலாம், விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று தொலைதூர பயணங்கள் நிகழும் மேலும் இலாபம் தரும் நாளாக அமையும், தனுசு ராசிகளுக்கு இன்று மங்களகரமான வளமான நாளாக அமையும் மாமியார் வீட்டு பக்கம் உங்களுக்கான மதிப்பு மரியாதை கிடைக்கும் மேலும் இன்று ஆரம்பம் சோர்வாக இருந்தாலும் மகிழ்ச்சி மன நிறைவு தரக்கூடிய நாள் இன்று, மகர ராசி நேயர்களுக்கு இன்று குடும்பத்தில் சண்டை சச்சரவு நிகழும் அதனால் அமைதியை கடைபிடிக்க வேண்டும், கும்ப ராசி நேயர்களுக்கு இன்று மன அமைதி மற்றும் இவ்வளவு நாள் தடைபட்ட விஷயங்கள் எல்லாம் இன்று மாற்றம் காண்பீர்கள், மீனம் ராசி நேயர்களுக்கு குடும்பத்தில் அமைதி வேண்டும் மற்றும் பண உதவி திடீரென்று கைகூடும்..!!