
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் பெருமாத்தூரைச் சேர்ந்த ஜசீர், நௌபல், நியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குந்தேராவைச் சேர்ந்த மாணவியை திருவனந்தபுரம் அழைத்து வந்து பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 20ஆம் தேதி மாணவி காணாமல் போனார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மொபைல் டவர் இருந்த இடத்தை மையமாக கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமி போலீசில் வாக்குமூலம் அளித்த நிலையில், குற்றவாளிகள் கைதாகினர்.