
இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்..!! போலீசார் வலைவீச்சு..!!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜெர்வின் (21). இவருக்கும், 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் ஆசை வார்த்தை கூறி ஜெர்வின் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பலமுறை இதுபோன்று நடந்துள்ளது. தற்போது சிறுமிக்கு திடீர் வயிற்றுவலி ஏற்படவே அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. புகாரையடுத்து தலைமறைவான ஜெர்வினை போலீசார் தேடி வருகின்றனர்.