
இப்பொழுது கள்ளகாதல் பெருகி வருகிறதே ஏன்?
கள்ள காதல் பெருகி வருவதற்கு முக்கிய காரணம் ஆண் தான்…
திருமணம் ஆன ஒரு ஆண் வேறு ஒரு பெண்ணிடம் ஏன் செல்கிறான் என்றால் அதுக்கு 99% காரணம் பாலியல் ஆசையில் தான்…
ஆனால் ஒரு பெண் வேறு ஒருவனை நாடுகிறார் என்றால் அது முழுக்க முழுக்க பாலியல் தேவைக்கு அன்று…பெண்கள் (90%) பாலியல் ஆசை களுக்காக வேறு ஒரு ஆணிடம் செல்வதில்லை..
ஒவ்வொரு பெண்ணின் உலகம் வேறு. அந்த உலகத்தை அவன் கணவன் தான் புரிந்து கொள்ள வேண்டும்…
பெண்ணின் உலகத்தை புரிந்து கொ்ள்ளாத ஆண்களால் தான் பெரும்பாலான பெண்கள், தம்மை புரிந்து கொள்ளும் அல்லது புரிந்து கொண்டதாக நடிக்கும் ஆணின் பக்கம் சாய்கிறார்கள்.
ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் பெரும் காதலும், தன்னை பாராட்ட மாட்டாரா என்ற எதிர்பார்ப்பும்,
தன் அழகை ரசிக்க மாட்டாரா என்ற ஆவலும் மனதில் கனன்று கொண்டிருக்கிறது.
தீப்பிழம்பாய் இருக்கும் மனதிற்கு யாராவது ஆறுதல் என்ற நீர் ஊற்றி……
. “அணைக்கும்” போது அப்பெண் சூரியனை கண்ட அல்லி போல் தடம் மாறுகிறாள்.
எல்லா கள்ள காதலுக்கும் காரணம் அலட்சியமான ஆண்களின் கோப வார்த்தைகள்,
அன்பே இல்லாத கடமைக்கு தொடுதல்,
அக்கறை இல்லாத உறவு
பாராட்டாத மனம்,
சிரிப்பு இழந்து இறுகி போன முகம் என பலது இருக்கிறது.
அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும்
ஒரு இதயத்திற்கு
உண்மையான அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ
அங்கு உருவாகும் ஒரு உன்னதமான உணர்விற்க்கு
காதல் என்று பெயர்..
20 வயதில் வந்தால் காதல் என்றும்
40 வயதிற்க்கு மேல் வந்தால் கள்ள காதல் என்றும் பெயர்……!!!
அவ்வளவுதான்