பேசவும் முடியாத, Dial பண்ணவும் முடியாத,
Delete செய்யப்படாத
ஒரு நம்பர் இன்னைக்கும் சிலரது Mobile-ல Save ஆகி இருக்கலாம்..
லைக் பண்ணாத, Comment பண்ணாத,
அப்ப அப்போ போய் Check பண்ணி மட்டும் பாக்குற,
இன்னைக்கு வர Unfriend, Unfollow, Block பண்ண தோணாத
ஒரு Social media Account அவங்க Search History-ல இருக்கலாம்..
பேசிக்கிட்ட நாள்ல இருந்து பிரிஞ்ச நாள் வர அனுப்பிக்கிட்ட மெசேஜ்கள்
இன்னைக்கும் Delete செய்யப்படாம இருக்கலாம்..
எங்கையாச்சும் போய்க்கிட்டு இருக்கப்போ Sudden-ah கண்ணுல படுற
என்னைக்கோ போய் பேசிக்கிட்டு இருந்த அந்த
Coffee shop Table..
இன்னைக்கும் அதே மாதிரி அமைதியா இருக்கலாம்..
முதல் முதலா கைக் கோர்த்து நடந்த சாலைகள்ல
இன்னைக்கு அவங்களுக்கு சொந்தமானவங்களோட கால் தடங்கள் இருக்கலாம்..
எது எப்பிடி மாறி இருந்தாலும்..
எந்த அளவுக்கு இல்லைனு உதடுகள் பதிலளிச்சாலும்..
மனசுல ஒரு ஓரத்துல அந்த நினைவுகள்
இப்போ வர ஆழமா மூச்சி விட்டுக்கிட்டு தான் இருக்குது..❤️