இயற்கை மருத்துவத்தை மேற்கொள்வதன் மூலம் நமது உடலில் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகள் மிக எளிய முறையில் சரியாகி விடுகிறது…
கற்பூரவள்ளி இலையின் சாற்றை எடுத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் இருமல் சளி எப்படி இருந்தாலும் சரியாகும், இதயம் நன்றாக பலமாக இருப்பதற்கு அடிக்கடி அத்திப்பழத்தை சாப்பிட்டு வரலாம், இதன் மூலம் இதயத்துடிப்பு சீராகவும் ரத்த ஓட்டங்கள் சீராகவும் இருக்கும், தினமும் மூன்று பேரிச்சம்பழம் சாப்பிட்டு வர உடல் பலவீனம் நீங்கும் ஞாபக சக்தி அதிகரிக்கும் முடி உதிர்வதை நிறுத்தும், எந்த வகையான விஷக்கடியாக இருந்தாலும் உடனே பூண்டை அரைத்து கட்ட விஷக்கடி குணமாகும், மலச்சிக்கல் நீங்க சர்க்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து சாப்பிட்டால் இதில் உள்ள நார்ச்சத்து மலமிளக்கியாக செயல்படும், அதேபோல் பல்வலி குணமாக 23 குறுமிளகு சிறிதளவு பட்டை சேர்த்து கொதிக்க விடவும் வெந்நீர் வற்றி ஒரு டம்ளர் ஆனதும் அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து இறுதியாக சிறிய இஞ்சி துண்டை நறுக்கி அதனை பத்து நிமிடம் வெந்நீரில் ஊற வைத்து பருகினால் பல்வலி 10 நிமிடத்தில் பறந்தோடும்…!!




