இயற்கை முறையில் பெண்கள் மார்பகங்களை பெரிதாக்க இதை மட்டும் செய்ங்க போதும்..!!

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன,
அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டுகின்றன.

* பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும்.

* செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.

* கை, கால், கணுக்கால், மார்பகம், இடுப்பு ஆகிய இடங்களில் தேவையான அளவு தசைகள் அமையும். கன்னத்திலே தொங்குகின்ற தசை, தோல்களிலே கனத்து தடித்திருக்கின்ற தசை, விலா எலும்புகளுக்குக் கீழே விரிந்து வளர்ந்து அடர்ந்திருக்கின்ற தசை ஆகியன மறையும்.

* ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும்.

* மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்; நடையில் நளினம் மலச்சிக்கலைத் தவிர்க்கும். மனத்தை மகிழ வைக்கும்; சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும்.

* இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.

* இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும். முத்தான மூன்று பயிற்சிகள் இதோ!

பயிற்சி 1

ஓரடி அகளம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.

 

பயிற்சி 2

முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பயிற்சி

பயிற்சி 3

முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். மூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை அறிவோம் அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். நிமிர்ந்த மார்பு வாய்க்கும். மார்பகங்கள் செழிப்பாய் இருக்கும் . இடை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும்.

ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

Read Previous

ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி?.. செய்முறை உள்ளே..!!

Read Next

ஆயுஷ்மான் பாரத் திட்டம்..!! மத்திய அமைச்சர் ஜேபி நட்டா விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular