
தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. கடந்த சில காலமாக அதிமுக ஒரே கட்சியாக இல்லை என்று நமக்கு நன்றாகவே தெரியும். இது பல கட்சிகளாக பிரிந்து கிடக்கின்றது. அதில் முக்கிய இரண்டு தலைமைகள் தான் எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் இருக்கும் கட்சியும் ஓ பன்னீர் செல்வத்துக்கு கீழ் இருக்கும் கட்சியும். இந்த இருவரும் சேருவார்களா மாட்டார்களா என்ற பரபரப்பு மக்களிடையே இருந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த வகையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விவாதம் அடிக்கடி முன்வைக்கப்பட்டு தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் எலக்சன் கமிஷன் இறுதி விசாரணையை இன்று தொடங்கியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக பயன்படுத்த தடை கோரியும் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் இருக்கும் கட்சிக்கு ஒதுக்க கோறியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை பலவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கையில் எலக்சன் கமிஷன் இதற்கான இறுதி விசாரணையை இன்று தொடங்கியுள்ளது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். கட்சி பிரிந்து கிடந்தாலும் சின்னத்திற்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை.