இரட்டை சுங்க கட்டணம் வசூலிப்பதை கண்டித்து லாரி உரிமையாளர் சங்கம் போராட்டம்..!!

தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புது பாண்டியபுரம் சுங்கசாவடியில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், ஓட்டுனர்களுக்கு வசதிகள் குறைவாக உள்ளதாகவும் தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் லாரி புக்கிங் ஏஜென்ட் தங்கத்தினார் சுங்கச்சாவடியின் முன்பு முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லாரிகளின் சட்ட விரோதமாக கட்டணம் வசூலிபதினை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்துள்ளனர். புதுபாண்டியபுரம் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒரே நாளில் திரும்பும் கட்டணத்தை வசூலிக்கிறார்கள். இது குறித்து ஒரு மாதத்திற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என சுங்கச்சாவடி தலைவர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். லாரி முன்பதிவு முகவர்கள் டோல்கேட் அதிகாரிகள் முதல் பயணத்தில் உண்மையான சுங்கம் கட்டணத்தை திரும்பவும் பயணத்தின் போது பாதி கட்டணத்தின் வசூலிக்க வேண்டும் என்றார், அது மட்டும் இன்றி  நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் சுங்கச்சாவடி குத்தகைதாரரும் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு குடிநீர் வசதி மற்றும் பிற அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தர வேண்டும் எனவும்  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுங்கச்சாவடிக்கு எதிரியாக லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெகன் மேயர் ஆவதற்கு முன்பே தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்து உள்ளார். சுங்கச்சாவடி  ஆபரேட்டர்களை தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்துவதை கண்டித்த அவர் எட்டு சுங்கச்சாவடிகளில் இரண்டு சுங்கச்சாவடிகள் மட்டுமே ஹை பிக் ஹவர்ஸில் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம்புலன்ஸ் கூட டோல் பிளாசாவை கடக்க கடினமாக உள்ளது என்றும் அவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சுங்கச்சாவடி குத்தகைதாரர் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கிடையில் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தூத்துக்குடி மாநகராட்சி எல்லையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிற்கு சுங்கச்சாவடி மாற்ற வேண்டும்  என கூறி உள்ளார்,சுங்கச்சாவடி மேலாளர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் டோல்கேட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Read Previous

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு ஏற்றுமதியில் மந்த நிலை..!!

Read Next

பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மதுரை மல்லி விளைச்சல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular