இன்றைய சூழலில் ஒரு குழந்தையை போதும் என்று நினைக்கும் பெற்றோர்கள் எத்தனையோ பேர் உண்டு ஆனால் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதனால் சில விஷயங்கள் மனதளவில் நன்மை தரும்..
நீங்கள் வீட்டில் இல்லாத போது கூட உங்கள் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள், இந்த சூழ்நிலையில் நாம் குழந்தையை தனியாக விடவில்லை என்று திருப்தியோடு இருப்போம், தலைமுறை வேறுபாடு காரணமாக சில பிரச்சனைகளை நம்மால் தவிர்க்க முடியாமல் போகலாம் முடிந்தவரை இன்னொரு குழந்தை என்பது அவசியமாகவே இருக்கிறது, சில நேரங்களில் பெற்றோரிடம் பகிரப்படாத பிரச்சனைகள் கூட உடன் பிறந்தவர்களிடம் கூறுகின்றனர் இதனால் குழந்தைகளின் மனநிலை ஆரோக்கியமும் உடல்நிலை ஆரோக்கியமும் சீராக இருக்கிறது..!!