
மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடித்த தக் லைப் படம் அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்..
36 வருடங்களுக்குப் பிறகு கமலஹாசன் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் டக் லைவ் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் திரிஷா ஜோஜி ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டாக்கீஸ் மெட்ராஸ் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது,( இதனை அடுத்து இப்படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர், கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் “தக் லைப்” படத்தின் வெளியிட்டு தேதிக்காண டீசரை பட குழுவினர் கடந்த ஏழாம் தேதி வெளியிட்டனர், அதில் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5 வெளிவரும் என தெரியவந்துள்ளது, இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி டீசர் இரண்டு நாட்களில் தற்போது மூன்று கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை பட குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்..!!