இரண்டு பேருந்துக்கு நடுவே சிக்கி இளைஞர் பரிதாப பலி..!! போதை ஓட்டுனரால் நடந்த சோகம்..!! கோவையில் துயரம்..!!

கோவை மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் பேருந்து பின்னோக்கி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இயக்கி உள்ளார். இந்த பேருந்துக்கு பின்னால் ஒரு பேருந்து இருந்தது.

இந்நிலையில் இரண்டு பேருந்து நடுவே இருந்த இளைஞரின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இளைஞர் நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாய் உயிர் இழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ஒண்டிபுத்தூர் பகுதியை சார்ந்தவர் என்பதும் அவர் மது போதையில் இருந்ததே விபத்திற்கு காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது. விபத்தில் பலியான இளைஞர் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை பொதுமக்கள் மற்றும் விபத்தில் தொடர்பு இல்லாத மற்றொரு பேருந்து நடத்துனர் ஆகியோர் ஆத்திரத்தில் தாக்கிய காட்சிகளும் வைரலாகி வருகின்றது.

Read Previous

திருமணமாகாத பெண் காவலரின் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்..? – பரபரப்பு புகார்.!!

Read Next

“பிறந்து 3 மணிநேரம் தான்” – பச்சிளம் குழந்தையை நடுரோட்டில் வீசிச்சென்ற அவலம்..!! திருநங்கைக்கு குவியும் பாராட்டு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular