இரண்டு மாநில முதல்வர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி..!!

ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர் வரை செல்லும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தொடர்பாக ஆந்திர  முதல்வர் மற்றும் இந்த அணை கட்டுதலுக்கு குறித்து எந்த எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக முதல்வர் ஆகிய மாநில முதல்வர்கள் குறித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்டணம் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டர்கள் மட்டுமே செல்லும் பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதி இன்றி தடுப்பணை கட்ட முயற்சி செய்வது ஏற்புடையது இல்லை என்று ஆந்திர முதலமைச்சர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொது செயலாளர் மாண எடப்பாடி பழனிச்சாமி கண்டனத்தினை தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் “பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் மட்டுமே செல்லும் பாலாறு தமிழகத்தில் 222 கிலோமீட்டர் வரை சேர்ந்து பின் கடலில் கலக்குகின்றது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயற்சி செய்வது ஏற்புடையது இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் முல்லை -பெரியாறு, காவேரி -மேகதாது, பாலாறு என்று தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மௌனியாக இருந்து தாரை வார்க்கும் இந்த விடியா திமுக அரசின் முதல்வருக்கும் எனது கடும் கண்டனம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்ச்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று ஆந்திர முதல்வரை வலியுறுத்தியுள்ள எடப்பாடி எப்போதும் போலவே கண்டு காணாதது போல் இருந்து மாநில உரிமைகளை தாரை வார்க்காமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று தமிழக முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்..!! மீண்டும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்..!!

Read Next

அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நடிகர் கமலஹாசன்..!! அதே தோற்றம் வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular