
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் தற்போது சாணிகாகிதம், ராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ரிலீசுக்கு தயாராகி கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று தனுஷின் பிறந்த நாளையொட்டி கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. இந்த டீசரில் வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் வெடிக்கும் சத்தத்துடன் அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது. மேலும் இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.