பொதுவாகவே இரவில் யாராவது காலை மசாஜ் செய்தால் இதமாக இருக்கும். இதனால் நீண்ட நேரம் தூக்கமும் வரும்.
உடலை பராமரிக்கும் போது முகம், முடி, உடல் மற்றும் நகங்கள் போதுமான அளவு அதிகமாக பராமரிப்பது வழக்கம்.
ஆனால் கால்களை பராமரிப்பதில்லை. பகலில் கால் பராமரிப்புக்கு போதுமான நேரம் இல்லை என்று நீங்கள் உணர்ந்தால், இரவு நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது மாத்திரமின்றி இரவில் தூங்குவதற்கு முன்பு கால் பாதத்தில் மசாஜ் செய்தால் போதும் உடலில் உள்ள பல பரிச்சினைகள் குணமாகும். அது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
பாதங்களில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் முடிவடைகிறது. அது ஒவ்வொன்றும் உடற் பாதங்களுடன் தொடர்புடையதாகும். இதற்கு மசாஜ் செய்வதன் மூலம் உடலில் பல மாற்றங்கள் நிகழும்.
- தினமும் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதன் மூலம் மார்புச்சளி நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- காலில் ஐந்து தோல் அடுக்குகள் உள்ளன. இதில் அதிகமான முடிகள் காணப்படுவதில்லை. எனவே தேய்க்கும் எண்ணெயானது உறிஞ்சப்படும். இதனால் ரத்த நாளங்களில் வேகமாக பயணித்து பல நன்மைகளை தரும்.
- தூங்குவதற்கு முன்பு லாவண்டர் எண்ணெயை உள்ளம் காலில் தேய்த்து மசாஜ் செய்தால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும்.
- புதினா மற்றும் கிராம்பு எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.
- யூகலிப்டஸ் எண்ணெய் தேய்க்கும்போது சுவாசம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் நீங்கும்.
- நறுமண எண்ணெய்களை மசாஜ் செய்யும் போது மருத்துவ குணங்கள் உடல் முழுவதும் ஊடுருவி செல்லும்.
- கல்லீரல் பிரச்சனைகள் சரியாகும்.
- எண்ணெய் மசாஜ் வீக்கத்தைத் தணிக்கிறது மற்றும் பாதங்களில் உள்ள வலியை நீக்கும்.
- அழற்சியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.