உள்ளாடைகள் இல்லாமல் உறங்குவது சரியா..?? தவறா..??
பகலில் உள்ளாடைகளை அணிந்து கொண்டு இருக்கும் ஆண்களும் பெண்களும் இரவில் உள்ளாடைகளை அகற்றி தங்களுக்கு இணக்கமான உடைகளை அணிந்து உறங்க விரும்புகின்றனர். இந்நிலையில் உள்ளாடைகள் இல்லாமல் இரவு நேரத்தில் தூங்குவது சரியா அல்லது தவறா என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இந்த காலகட்டத்திலும் பலரும் உள்ளாடைகள் இல்லாத உறக்கத்தை விரும்புகின்றனர். பகல் நேரத்தில் அணியும் உடைகள் மற்றும் உள்ளாடைகள் இறுக்கமாக இல்லாமல் அணிய வேண்டும். ஏனென்றால் உடலில் சுரக்கும் வியர்வை வெளியேறாமல் உடலிலேயே ஒட்டி ஆடையிலேயே அது கலிவாக மாறுகிறது. இதனால் இரவிலும் அதே நிலை ஏற்பட்டால் உடலுக்கு ஏதேனும் பிரச்சனை கூட வரலாம். இரவு நேரம் நாம் உள்ளாடை அணிந்து உறங்குவது சருமத்தில் உள்ள சுவாசதிரை வெகுவாக பாதிக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் உள்ளாடைகளை அணியும் போது அதிலும் லயலான் மற்றும் பாலிஸ்டர் சம்மந்தமான உள்ளாடைகளை போடும் போது அது ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை உடையது இதனால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து தோல் எரிச்சல், தொற்று நோய்கள் உண்டாகுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இரவில் உள்ளாடையின்றி உறங்குவது நல்லது. ஆண்களும் சரி பெண்களும் சரி உள்ளாடையின்றி உறங்குவதால் பல பிறப்புறுப்பு தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம்.