
Oplus_131072
இரவில் ஏன் நகம், மற்றும் முடி போன்றவற்றை வெட்டக்கூடாது தெரியுமா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!
கண்டிப்பாக இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் எல்லா வீட்டிலும் நாம் கேட்டிருப்போம். நைட்ல நகம் வெட்ட கூடாது இது கூட தெரியாதா அப்படின்னு நம்ம அம்மாவோ அப்பாவோ நம்ம திட்டுவாங்க. மற்றும் நைட்ல முடி வெட்டக்கூடாது அப்படின்னு சொல்லுவாங்க. இது எதற்காக சொல்லப்பட்டது ஏன் இரவில் நகம் மற்றும் முடி போன்றவற்றை வெட்டக்கூடாது என்று சொல்றாங்க அப்படின்னு நமக்குள்ள கேள்வி எழும்பும் அல்லவா அதற்கான ஒரு தீர்வு தான் இந்த பதிவு. கண்டிப்பா எல்லாரும் இந்த பதிவை படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
இன்று போல அந்த காலத்தில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எதுவும் கிடையாது. வீட்ல விளக்குகளின் ஒளியை கொண்டே அனைவரும் வாழ்ந்து வந்தார்கள். அப்படி இருக்கும் பொழுது இரவு நேரத்தில் நகம் மற்றும் முடி போன்றவற்றை வெட்டும்போது அது காற்றில் பறந்து உணவில் ஏதாவது விழுந்து விட்டால் அதை நம்மால் கண்டறிய முடியாது. அதுமட்டுமின்றி நகமோ அல்லது முடியும் விழுந்த உணவை குழந்தைகளும் சரி வீட்டில் உள்ள பெரியவர்களும் சரி சாப்பிட்டால் ஏதாவது வயிற்று உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதற்காகத்தான் இரவில் நகம் முடி வெட்டக்கூடாது என்று கூறியுள்ளனர்.