இரவில் கேட்ட அலறல் சத்தம்..!! அக்கம் பக்கத்தினர் கண்ட அதிர்ச்சி காட்சி..!!

இராணுவத்தில் பணிபுரிந்து தற்பொழுது ஒரு மாத கால விடுமுறையின் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய இராணுவ வீரர் தனது வீட்டில் ஏற்பட்ட குடும்ப சண்டையின் காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே செல்லாத்தூர் பகுதியை சார்ந்தவர் விஜயன் (வயது 35), அவர் 10 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். விஜயனின் மனைவி மோனக, அந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இராணுவத்தில் பணிபுரிந்து வந்த விஜயன் ஒரு மாத கால விடுமுறையின் காரணத்தால் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

மேலும் அவர் புதிதாக வீடு ஒன்றைக் கட்டி வருகின்றனர். இந்த புது வீடு தொடர்பாக அவரது மனைவிக்கும் அவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்மையில் இரவில் மது அருந்திவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் விஜயன் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் கழுத்தை கத்தியை கொண்டு அறுத்து எறிந்தார்.

இந்த நிலையில் மோனகாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவர் ரத்த வெள்ளத்தில் உயரிலிருந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ராணுவ வீரர் விஜயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

என்னை பெருமைபடுத்திவிட்டான்..!! செம ஹேப்பியாக தன் தம்பிக்கு ராகவா லாரன்ஸ் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்..!!

Read Next

வெப்ப அலைகளில் இருந்து தனது நாட்டு மக்களை காக்க ஜப்பானியர் என்ன செய்றாங்க தெரியுமா..? அசத்தல் வீடியோ உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular