இரவில் தாமதமாக தூங்குபவர்கள் தான் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என்று இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள இந்த செய்தி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனில் இம்பீரியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி ஒன்றிணை மேற்கொண்டார். அதாவது மக்களிடம் தூங்குவதற்கான நேரம் எவ்வாறு துவங்குகிறார்கள் போன்றவர்கள் தொடர்பாக ஆராய்ச்சி ஒன்று நடத்தினார்கள். இதற்காக சுமார் 26 ஆயிரம் பேரிடம் அவர்கள் தூங்கும் நேரம் விழிக்கும் நேரம் எப்படி தூங்குகிறார்கள் என்பது போன்று பல கேள்விகளை எழுப்பி அதை ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில் அதிகாலை சீக்கிரம் எழுபவர்களை விட இரவில் தாமதமாக தூங்குபவர்கள் அறிவு வளர்கிறது என்பது தெரிய வந்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பொதுவாக அதிகாலையில் சீக்கிரம் எழுந்து படித்தால் அறிவாற்றல் வளரும் படிப்பது மனதில் பதியும் என்று கூறுவார்கள்.அதனால் நாம் சிறிய வயதிலிருந்தே தேர்வுகள் போன்ற நேரங்களில் காலையில் சீக்கிரம் எழுந்து படித்து வந்தால் நாம் படிப்பது மனதில் பதியும் தேர்வும் நன்றாக எழுத முடியும் என்றும் பெரியோர்கள் கூறுவார்கள். இந்நிலையில் தற்போது இரவில் தாமதமாக தூங்குபவர்கள் தான் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் அதே சமயத்தில் அதிகாலை சீக்கிரம் எழுபவர்கள் அறிவாற்றல் குறைவானவர்கள் என்று அர்த்தம் இல்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.