இரவில் தூக்கம் இன்றி கஷ்டப்படுகிறீர்களா..? இதை குடித்து பாருங்கள் அடுத்த உடனே உறக்கம் வரும்..!!

நமது உடல் ஆரோக்கியத்திற்கு குறைந்தது 8 மணி நேரம் உறக்கம் மிகவும் அவசியமாகும். ஆனால் வேலைப்பளு, மன அழுத்தம், உடல் நல கோளாறு ஆகியவை இருந்தால் நிம்மதியான தூக்கம் என்ற ஒன்று இருக்காது.

மேலும் நவீன கால உணவு மற்றும் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு விட்டதால் தூங்க வேண்டிய நேரத்தில் உணவு அருந்துவது, எழ வேண்டிய நேரத்தில் நன்றாக குறட்டை விட்டு தூங்குவது என்று மாறி மாறி செய்வதினால் உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றது. எனவே உரிய நேரத்தில் நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால் இயற்கையான வழிகளை நாம் பின்பற்ற வேண்டும்.

தேவையான பொருட்கள்

  1. இந்துப்பு
  2. ஆர்கானிக் பழுப்பு சக்கரை
  3. தேன்

செய்முறை

ஒரு பிளாஸ்டிக் பையில் இந்து உப்பு இரண்டு தேக்கரண்டி, ஆர்கானிக் பல்பு சர்க்கரை இரண்டு தேக்கரண்டி, தேன் நான்கு தேக்கரண்டி சேர்த்து நன்றாக குலுக்கி கொள்ளவும்.

இதை இரவு நேரத்தில் உறங்க செல்வதற்கு முன் நாவின் அடியில் தடவு விடவும். இவ்வாறு செய்வதால் இரவு நன்றாக தூக்கம் வரும்.

மற்றொரு தீர்வு

தேவையான பொருள்

  1. பால்
  2. கசகசா
  3. நாட்டு சர்க்கரை

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றிக் கொள்ளவும். பால் சூடாகும் பொழுது ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். பின் இவை இளம் சூட்டில் இருக்கும் பொழுது ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து பருகினால் பத்து நிமிடத்தில் தூக்கம் சொக்கி கொண்டு வரும்.

Read Previous

நீங்கள் கழிக்கும் சிறுநீர் நிறத்தை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியும்..!!

Read Next

கைவிரல் பயிற்சி செய்வதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular