இந்த நவீன உலகில் அனைவரும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் பலரும் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர். இதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். மற்றும் உடலில் எக்கச்சக்கமான பிரச்சனைகளும் இந்த உறக்கம் இல்லாததால் வருகின்றது. இரவில் தூக்கம் வரவில்லை என்று பல பேர் மருத்துவரை கூட நாடுகிறார்கள். இந்த வகையில் படித்தவுடன் தூக்கத்தை எப்படி வர வைக்க முடியும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
வெதுவெதுப்பான மாட்டுப் பால் ஒரு டம்ளர் இரவில் படுக்கும் முன்பு கொடுத்தால் சீக்கிரம் தூக்கம் வந்துவிடும். ஏனெனில் இந்த மாட்டு பாலில் உள்ள மெலடோனின் மற்றும் ட்ரைப்டோபோஃன் ஹார்மோன்கள் நிறைய அடங்கியுள்ளது. இது விரைவில் தூக்கத்தை வர வைக்கும்.
மேலும் இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால் தூக்கம் விரைவாக வரும் என்று நம் பெரியோர்கள் கூறி கூட நம் கேள்விப்பட்டிருக்கிறோம். சீரகத் தண்ணீர் சிறிதளவு கொதிக்க வைத்து குடித்தாலும் இரவில் தூக்கமின்மை பிரச்சனை நீங்கி தூக்கம் விரைவில் வரும். தயிரும் தூக்கமின்மைக்கு ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. தினமும் உணவுடன் ஒரு வேலைக்காவது தயிரை உட்கொண்டு வந்தால் இரவில் நல்ல உறக்கம் வரும். இவ்வாறு வீட்டிலேயே தூக்கம் வராமல் தவிக்கும் நபர்களுக்கு அருமையான வைத்தியம் உள்ளது இதனை பாலோ பண்ணி நீங்களும் பயன்பெறுங்கள்.




