
இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவு நேரத்தில் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இதோ….
வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கவும் நிம்மதியான தூக்கம் வரும், தூக்கமின்மை குறைய வெங்காயத்தை தோள் உரித்து அதில் சிறிதளவு உப்பை போட்ட தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும் நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டி கொள்ள வேண்டும் வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட தூக்கமின்மை பிரச்சனை நிவர்த்தியாகும், திப்பிலி கொடியின் வேறு எடுத்து இடித்து பொடி செய்து பொடியை வெறுவதுப்பான பாலில் கலந்து சிறிது வெள்ளம் சேர்த்து குடித்து வந்தால் இரவில் நல்ல தூக்கம் வரும், நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்த படுக்கும் முன் இந்த எண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து விட்டு வந்தால் தூக்கம் நன்றாக வரும், தூக்கமின்மை குறைய சர்பகந்தா செடியின் வேரை பொடி செய்து அதனுடன் ஏலக்காய் பொடி கலந்த காலை இரவு சாப்பிட்டு பால் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும், பாலில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து படுக்கப் போகும் குடித்து வந்தால் இரவில் ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கும், தர்ப்பை புல்லை தலையணைக்கு வைத்து படுத்தால் நன்றாக தூக்கம் வரும்,ஒரு டம்ளர் விதவிப்பான பாலை எடுத்து அதனுடன் சிறிது இலவங்கப்பட்டை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து இரவில் குடித்து வந்தால் ஆரோக்கியமான தூக்கம் வரும், கெட்டித் தயிருடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட தூக்குமின்மை பிரச்சனை நிவர்த்தியாகும், சுகமான தூக்கம் பெற வெங்காயம் உப்பு இரண்டையும் நீரில் கொதிக்க வைத்து சுடு சோற்றுடன் சாப்பிட வேண்டும், தூக்கமின்மை குறைய வெள்ளரி விதைகளை அரைத்து பாலில் குடித்து வர தூக்கமின் பிரச்சனை நிவர்த்தியாகும், பேரிச்சை முருங்கை ஆப்பிள் எலுமிச்சை கேரட் திராட்சை தேங்காய் பால் கொத்தமல்லி நெல்லி இவைகளை சாப்பிட தூக்கமின்மை பிரச்சனை நிவர்த்தியாகும், இரவு உணவுடன் பூண்டு சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும், அத்திக்காய் வெயில் வரைக்கும் இரவு சாப்பிட்டு வந்தால் நன்றாக உறக்கம் வரும், கசகசாவை பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி ஒரு கிராம் பொடியை எடுத்து ஒரு டீஸ்பூன் கற்கண்டுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும், சீரகத்தை வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் சுகமான தூக்கம் வரும், இரவு நேரத்தில் இருமலால் தூக்கம் வராமல் இருந்தால் வெங்காயம் உப்பு தண்ணீரில் வேக வைத்து இரவு சாப்பிட்டு வந்தால் தூக்கம் வரும், நிம்மதியான நித்திரைக்கு கசகசாவை முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பாலில் கலந்து காய்ச்சி சிறிது நேரம் ஆறவிட்டு கற்கண்டு சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கம் பெறலாம்…!!