நாம் அன்றாட வாழ்வில் தண்ணீர் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தண்ணீர் என்பது முக்கிய இடத்தையும் பிடிக்கிறது. ஏனெனில் அது ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. தண்ணீர் குடிப்பதால் அதிகமான நன்மைகள் இருக்கின்றன.
நமது ஆரோக்கியத்தை பராமரிக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தண்ணீர் என்பது உணவுக்கு முன் உணவுக்கு பின் என்று குடிப்பது போன்று காலையிலும் இரவிலும் குடிக்க வேண்டும். ஆனால் காலையில் மட்டும் இன்றி இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் தண்ணீரை சூடு செய்து வெந்நீர் போன்று குடித்து வந்தால் உடலுக்கு நிறைய பயன்கள் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள ரத்த ஓட்டம் அதிகரிக்கும் மேலும் மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இவ்வாறு இரவில் உறங்கும் முன்பு வெண்ணீர் குடிப்பதினால் செரிமானம் சீராகும். மேலும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.