இன்றைய இளைஞர்கள் மத்தியில் இரவு நேரங்களில் தூங்குவது என்பதே அரிதாகிவிட்டது, தூக்கமின்றி விடிய விடிய ஸ்மார்ட் ஃபோன்களை பார்ப்பதும் அல்லது வேலை சுமையின் காரணமாக மன அழுத்தத்தில் இருப்பதும் அதிகரித்து வருகின்றது, அப்படி இருக்கும் பட்சத்தில் இரவில் படுத்த உடனே தூங்குவதற்கு இதனை செய்வோம்..
அஸ்வகந்தா பல நூறு ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் முதன்மையும் ஆரோக்கியம் வாய்ந்த மூலிகை ஆகும், அஸ்வகந்தா சாதாரண மயக்க நிலையில் உண்டு பண்ண கூடிய தன்மை உடையது விரைவில் தூக்கம் வந்துவிடும், இந்த மூலிகையை பாலுடன் சேர்த்து பருகும் பொழுது நமது நரம்புகள் அமைதி படுத்தப்பட்டு விரைவில் நித்திரை வந்துவிடும், நல்ல தூக்கம் கிடைக்கும் இதனால் நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சராசரியான பரிணாமத்தில் இயங்கும், அதிகம் சேர்க்கப்படாமல் சிறிதளவு பாலில் கலந்து குடிப்பதனால் நல்ல தீர்வு கிடைக்கும் அதுவும் மருத்துவரின் ஆலோசனைப்படி..!!