
Oplus_131072
இரவில் பால் குடித்தால் உடலுக்கு ஆபத்தா..?? மருத்துவர்கள் கூறுவது என்ன..??
இரவு நேரத்தில் பால் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். இந்நிலையில் இரவு நேரத்தில் பால் குடிப்பது நன்மையா தீமையா என்று பல கருத்துக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இரவில் பால் குடிப்பது உடலுக்கு நல்லதா இல்லை ஆபத்தா என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இரவு நேரத்தில் பால் குடிப்பது உடலுக்கு நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இரவில் பால் குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் இன்றி நல்ல உறக்கம் வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை பால் குடிக்கலாம். பால் அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் தான் அதிகம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். பால் செரிமானத்தை ஒருபோதும் தடுக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பால் குடிப்பதால் ஆரோக்கியமும் அழகும் மேம்படும். மருத்துவ ஆலோசனையின் படி பொதுவாக பால் குடிப்பது அவர்களின் உடலுக்கு நல்லது தான் ஆனால் அவரவர் உடலின் தன்மையை பொறுத்து தான் பால் நன்மை விளைவிக்குமா இல்ல தீங்கு விளைவிக்குமா என்பதை நாம் கூற முடியும் என்று கூறுகின்றனர். இந்நிலையில் ஒருவர் பால் குடித்துவிட்டு அவருக்கு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.