இரவில் பிரா அணிந்து தூங்குவதால் புற்றுநோய் ஆபத்து ஏற்படுமா..? பெண்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
நம் அன்றாட வாழ்வில் ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று உடல் ஆரோக்கியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியும் நம் குடும்பத்தையும் நம்மை சுற்றி நமக்காக உள்ளவர்களையும் நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் பெண்களின் ஆரோக்கியம் என்பது ஒரு குடும்பத்திற்கும் அவளுக்குமே மிகவும் முக்கியமான ஒன்று. பெண்களின் ஆரோக்கியத்தை குறித்து நாம் பார்க்கையில் ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல வாழ்விற்கும் மார்பக ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சரியான அளவிலான பிரா அணிவது என்பது மிகவும் அவசியம். இந்த பிரா நல்ல தோற்றத்தையும் மார்பகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்நிலையில், பல பெண்களுக்கு இரவில் பிரா அணிந்து தூங்கலாமா, தூங்கக்கூடாதா மேலும் அவ்வாறு தூங்கினால் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு நாம் ஆளாவோமா? என்ற குழப்பங்கள் இன்னும் பல பெண்களின் மனதிற்குள் இருந்து கொண்டு தான் இருக்கிறது அதைப்பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சில பெண்கள் பிரா அணிந்து தூங்க விருப்பப்பட மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ப்ரா அணிந்து தூங்கும் போது சற்று ஏதோ ஒன்று அ சௌகர்யமாக உணர்கிறார்கள். 99% பெண்களிடையே புற்று நோய்கள் குறிப்பாக மார்பக புற்றுநோய்கள் உலகம் முழுவதும் உருவாகிறது என்று ஆராய்ச்சியில் தெரியும் வந்துள்ளது. ஆனால் ப்ராக்களால் மார்பகப் புற்றுநோய் உண்டாவது குறித்து எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என்பதை குறிப்பிடத்தக்கது. இரவில் உறங்கும் போது தளர்வான மற்றும் நமக்கு வசதியாக உள்ள பிரா அணிந்து தூங்கினால் அது எந்த ஒரு தீங்கையும் நமக்கு விளைவிக்காது. ஆனால் நம்முடைய பிரா சைஸ் என்னவென்று தெரியாமல் சற்று இறுக்கமாக உள்ள புறாக்களை அணிவதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியம் தீங்கு விளைவிக்கும். மேலும் இதனால் இறுக்கமான சூழலில் தோளில் அரிப்பு மற்றும் தடிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இறுக்கமான பிரா அணிந்து தூங்குவதால் மார்பகப் புற்றுநோயின் வாய்ப்பு அதிகம் என்று பரவலாக நம்பப்படுகிறது இருப்பினும் எந்த ஒரு கருத்துக்களும் அதற்கு ஆதரவாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




