இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவு நேரங்களில் தோசை, இட்லி, சப்பாத்தி என சாப்பிடுவது வழக்கம், சப்பாத்தி இரவில் சாப்பிடும் உணவாகவே பலரும் கடைபிடித்து வருகின்றனர்.
அப்படி இருக்கும் பட்சத்தில் இரவு நேரங்களில் சப்பாத்தி சாப்பிடுவது உடலுக்கு நன்மை தருமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு, அதற்கு உடல்நல ஆலோசகர் கூறும் கூற்று.. கோதுமை சப்பாத்தியில் கலோரிகள், கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருப்பதனால் இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவது தவிர்த்துக் கொள்ள வேண்டும், மேலும் சப்பாத்தி சாப்பிடுவதனால் செரிமானத்திற்கு வெகு நேரமாகும், உடலில் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் முடிந்தவரை இரவு நேரங்களில் சப்பாத்தி சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று உடல்நல ஆலோசகர் கூறுகின்றனர்..!!