இரவு நேரங்களில் கொசுக்கள் அதிகமாக கடிப்பது உண்டு மேலும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் வைரஸ் போன்ற காய்ச்சல் உண்டாகும், மேலும் மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் வருவதும் இயல்புதான்…
மேலும் கொசுக்களில் இருந்து தப்பிப்பதற்கு இரவு நேரங்கள் தொடங்குவதற்கு முன்பு சாயங்காலப் பொழுதுகளிலேயே ஜன்னல் கதவுகளை மூடி வைப்பதால் கொசுக்கள் வீட்டுக்குள் வருவதை தடுக்க முடியும், மேலும் இனிப்பு பலகாரங்களை அல்லது பழங்களை திறந்த வெளியில் வைக்காமல் இருப்பதன் மூலம் கொசுக்கள் வீட்டில் அண்டுவதை தவிர்க்க முடியும், மேலும் வீட்டை சுற்றி தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதன் மூலம் கொசுக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும், இதனை தாண்டி மருத்துவரின் ஆலோசனை பெற்ற வேப்ப எண்ணெய் உடலில் தேய்த்துக் கொள்வதன் மூலம் கொசுக்கள் நம்மை தாக்காமல் பார்த்துக் கொள்ள முடியும், மேலும் கொசு வலையை நாம் தூங்கும் இடத்தில் கட்டிக் கொள்வதன் மூலமும் கொசுக்களில் இருந்து நம்மால் தப்பித்து நம்மை பாதுகாக்க முடியும், இரவு நேரத்தில் கொசுவர்த்தி வைப்பதை விட இயற்கையான வேப்ப இலை புகை மூட்டத்தை போடுவதன் மூலம் கொசு கடிகளில் இருந்து விடுபட முடியும்..!!




