இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்.. மக்களே உஷாரா இருங்க..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே ஒரு சில உணவுகளை எல்லாம் காலையில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் இரவில் சாப்பிடக்கூடாது என்று முன்னோர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு இரவில் சாப்பிட்டுவிட்டு தூக்கம் இல்லாமல் தவிப்பார்கள். இந்நிலையில் சில வகையான உணவுகளை நாம் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இரவு நேரத்தில் குறிப்பாக காபி, டீ, சாக்லேட் போன்றவற்றை நாம் சாப்பிடக்கூடாது. மற்றும் குளிர்பானங்கள் குறிப்பாக காப்பின் கலந்த குளிர்பானங்களை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இதை நாம் சாப்பிட்டால் இரவில் தூக்கம் வராமல் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தக்காளி வெங்காயம் அதிக அளவு சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம். மேலும் மைதா சேர்க்கப்பட்ட பரோட்டா ,நாண், போன்ற உணவுகளையும் சிக்கன், மட்டன், மீன், இறைச்சி, மற்றும் கீரை வகைகளையும் இரவில் ஒருபோதும் சாப்பிடாதீர்கள். இதையெல்லாம் சாப்பிட்டால் இரவில் செரிமான பிரச்சனை ஏற்பட்டு வயிற்றுப் பிரச்சனை வரக்கூட வாய்ப்பும் அதிகம் உள்ளது. மேலும் காலையில் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் கூட வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே இந்த உணவுகளை எல்லாம் இரவில் சாப்பிடாதீர்கள்.




