
இரவு நேரத்தில் தலை குளிப்பவரா நீங்கள்..?? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான் கண்டிப்பா படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!
பெரும்பாலானோர் இரவில் தலை குளிப்பதை தான் அதிகம் விரும்புகிறார்கள். இந்நிலையில் பெரும்பாலான பெண்கள் ஷாம்பு பயன்படுத்தி தினமும் தலை குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இரவு நேரத்தில் இவ்வாறு தலை குளிப்பது அவ்வளவு நல்லதல்ல மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
தலை குளிப்பதற்கு முன்னதாகவே ஏதாவது ஒரு இயற்கையான ஹேர் மாஸ்க் பயன்படுத்தி தலையில் ஊற வைத்து சீயக்காய் போட்டு குளித்து வரும் பழக்கம் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் இருந்தது. ஆனால் இன்றோ செயற்கையான ஷாம்புகளை பயன்படுத்தி குளிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். இரவில் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் ஆபத்து தலைவலி மற்றும் பொடுகு தொல்லையை அதிகரிக்கலாம். ஏனென்றால் முடி காய்வதற்கு அதிக நேரம் எடுக்கும் இதனால் பாக்டீரியாக்கள் பூஞ்சை தொற்று உண்டாகி மிகப்பெரிய பிரச்சினைக்கு நம்முடைய முடி ஆளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. முடி கொட்டும் பிரச்சினை கூட ஏற்படலாம். மற்றும் கடும் தலைவலி வந்து அவதியும் படலாம். மற்றும் இரவின் தலை குளிப்பதால் தலை நன்றாக காயும் முன்னரே நமக்கு உறக்கம் வந்துவிடும். இதனால் தலை நன்றாக காயாமல் ஜலதோஷம் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் வரும்.