
இரவு நேரத்தில் பல் துலக்குவதால் கிடைக்கும் நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
தினசரி வாழ்க்கையில் பல்துலக்குவது என்பது அனைவரின் வாழ்க்கையிலும் அவசியமான ஒன்று. காலையில் கட்டாயமாக அனைவரும் பல் துலக்குவோம். இரவில் ஒரு சிலர்தான் பல் துலக்குவார்கள். ஆனால் காலை மற்றும் இரவு இரண்டு வேளையும் பல் துலக்குவது மிகவும் ஆரோக்கியம் தரும். இந்நிலையில் இரவில் பல் துலக்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இரவில் தூங்குவதற்கு முன்பு பல் துலக்குவதால் இதய ஆரோக்கியம் மேம்படும். அதுமட்டுமின்றி இதய நோயின் அபாயம் கண்டிப்பாக குறையும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இரவு நேரத்தில் பல் துலக்குவதால் வாயில் பாக்டீரியா பெருகுவதை தடுக்கும். ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.