இரவு நேரத்தில் வலது பக்கம் மற்றும் இடது பக்கம் படுத்து உறங்குவது எது சிறந்தது..!!

இரவில் படுக்கையில் நம்மில் பலரும் எழும் சந்தேகம் இடது பக்கம் படுத்து தூங்குவது நல்லதா அல்லது வலது பக்கம் படுத்து தூங்குவது நல்லதா என்பதை இந்த கேள்விக்கு பொதுநல மருத்துவர் கூறும் பதில் இதோ…

வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு வலது பக்கமாக படுத்தால் இடது பக்க குடல் இரைப்பையை அழுத்தும் இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். இடது பக்கமாக படுக்கும் போது இரைப்பையில் உள்ள உணவு புவியீர்ப்பு விசையால் இரைப்பையில் முழுவதும் இறங்கி விடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படாது..

இரவு சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது குறைந்தது 2 மணி நேரம் கழித்து படுக்க செல்ல வேண்டும் உணவை சாப்பிட்ட பின்னர் குனிந்து வேலை செய்யக்கூடாது கனமான பொருளை தூக்கக்கூடாது உடற்பயிற்சி எதுவும் செய்யக்கூடாது படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியில் இருந்து ஒரு அடிவரை உயர்த்தி கொள்வதால் உணவு குழாய்கள் அமிலம் தாவுவதை தடுக்கலாம். இடது பக்கமாக படுக்கும் போது உணவு நிரம்பிய இரைப்பையானது கல்லீரலுக்கு அழுதாது இதனால் செரிமானம் சிறப்பாக ஊக்கிவிக்கப்படும் இடது பக்கமாக தடுப்பது நனநீர் சுழற்சியை தூண்டி உடல் அசுத்தங்கள் இதன் வழியாகவும் வெளியேற வாய்ப்பு கிட்டும் ரத்தம் சீக்கிரம் சுத்தமாகும் கீழ் பெருஞ்சிரை வலப்பக்கம் இருப்பதால் இடப்பக்கமாக படுக்கும் போது அழுத்தம் ஏற்படாமல் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் இதயத்துக்கு இவை நல்லது..

சிலருக்கு வலது பக்கமாக படுக்கும் போது நாக்கும் தொண்டையும் தசைகளும் தளர்ந்து சுவாசக் குழாயை அழுத்தும். அப்போது குறட்டை ஏற்படும் இடது பக்கமாக படுப்பது தசைகளை சமநிலையில் வைத்துக் கொள்ளும் என்பதால் பெரும்பாலும் குறட்டை ஏற்படுவதில்லை கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக் கூடாது இடது பக்கம் ஒரு கழித்து படுப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்..!!

Read Previous

நீயா நானா நிகழ்வில் கலந்து கொண்ட மணிமேகலை அக்காவினை போல் எத்தனையோ அக்காக்கள் தனது கனவுகளை நிறைவேற்றுகின்றனர் பிறரின் வெற்றியின் மூலம்..!!

Read Next

உடலுக்கு தேவையான புரோட்டீனை வழங்கக்கூடிய தானியம் இதுதான் அவசியம் படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular