
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றியத்தில் பாஜக சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது பாஜக ஒன்றிய தலைவர் வடிவேல் மற்றும் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பூத் கமிட்டி விரிவாக அமைப்பதற்கும் மற்றும் மத்திய அரசு நலத்திட்டங்கள் கொண்டு சேர்ப்பதற்கும் ஆலோசனை நடைபெற்றது.