
வீரவநல்லூரை சேர்ந்த பிரம்மநாயகம்(36) முத்துச்சாமி, மகாராஜா ஆகியோர் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. முத்துச்சாமி, மகாராஜா ஆகியோரின் நண்பரான பொன்ராஜ் (20) 27. 07. 2023 அன்று பிரம்மநாயகத்தின் இருசக்கர வாகனத்தையும், வாசல் கதவையும் அருவாளால் தாக்கி சேதப்படுத்தி அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரம்மநாயகம் அளித்த புகாரில் போலீசார் இன்று பொன்ராஜை கைது செய்தனர்.