
தேனில் நெல்லிக்காயை ஊற வைத்து தினசரி ஒன்றை சாப்பிட்டு வர இருதயம் மற்றும் நுரையீரல் பலம் பெறும்…
சிறிது பொறித்த வெங்காயத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர இருமல் குறையும். ஈரல் வலி குணமாக ஆடுதொடா இலைச் சாற்றை தேன் கலந்து அருந்தி வர குணமாகும். ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வர ஈரல் வலி குணமாகும். கரிசலாங்கண்ணிக் கீரை மிகவும் ஈரல் வியாதிக்கு நல்லது நொச்சி இலையை மைய அரைத்து பத்து மில்லி அளவு குடித்து வர ஈரல் வீக்கம் குணமாகும். உடல் மற்றும் நுரையீரலில் சளி குறைய துளசி விதைகள் மற்றும் இஞ்சி எடுத்து தனித்தனியாக உலர்த்தி பொடி செய்து ஒன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும். பாலில் துத்தி பூவை பொடி செய்து சர்க்கரை கலந்து அருந்தி வர கபம் தீரும் இஞ்சி மற்றும் புதினாக்கீரை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குறையும். பற்பாடகம் நிலவேம்பு சீரகம் சுக்கு அதிமதுரம் இவைகளை நைட்டு சுண்டை காய்ச்சி குடித்து வர காய்ச்சல் குறையும் அதிமதுரம் சோம்பு சர்க்கரை கொடி வேலி வேர்ப்பட்டை ஆகியவற்றை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்..!!