
உயரமான கம்பிகளை கையில் தூக்கி செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி தொகுப்பு.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் மாவட்டத்தில் உள்ள ஆலம் பகுதியில் மொகரம் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மத குருமார்கள் தலைமையில் கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்தபோது உயரமாக இருந்த கொடி ரயில்வே மின்சார கம்பிகள் மீது உரசியலில் கம்பியின் வழியே மின்சாரம் பாய்ந்தது.
சற்றும் எதிர்பாராத நொடி பொழுதில் நடந்த சம்பவத்தில் சிலர் மின்சாரம் தாக்கப்பட்டு நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தனர். பதறிப்போன சிலர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
#मोहर्रम में हादसा 😢#UP के संभल ज़िले में #मोहर्रम के जुलूस में निकाले जा रहे #अलम में करंट उतरने से आधा दर्जन लोग घायल हो गये, बारिश के चलते भीगने से अलम रेलवे ट्रैक पार करते वख्त बिजली के संपर्क में आ गया था#Live pic.twitter.com/V9v1su1Xka
— Dr.Ahtesham Siddiqui (@AhteshamFIN) July 28, 2023